கிளாசிக் 350க்கு சிலிப்பர் கிளட்ச்
'ரயால் என்பீல்டு' நிறுவனம், 'கிளாசிக் 350' பைக்கை, மேம்படுத்தி 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. 'டூயல் சேனல் ஏ.பி.எஸ்.,' வசதி உள்ள பைக் மாடல்களுக்கு மட்டும், 'அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச்', 'யூ.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் போர்ட்' ஆகிய இரு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இயந்திர மேம்பாடு மற்றும் அம்சங்களில், எந்த மாற்றமும் இல்லை. கருப்பு மற்றும் நீல நிற பைக்குகளின் உற்பத்தி நிருத்தப்பட்டுள்ளன. தற்போது, ஏழு நிறங்களில் மட்டுமே இந்த பைக் வருகிறது. இன்ஜின் - 349 சி.சி., ஜே சிரீஸ் பவர் - 20.2 ஹெச்.பி., டார்க் - 27 என்.எம்., எடை - 195 கிலோ விலை: ரூ. 1.87 முதல் 2.24 லட்சம்