மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
'ஸ்விட்ச் மொபிலிட்டி' நிறுவனம், 'இ.ஐ.வி., - 12' என்ற நாட்டின் முதல் மின்சார தாழ்தள பேருந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பேருந்து, 'ஸ்டான்டர்ட் மற்றும் அல்ட்ராலோ' என இரு வகையில் வந்துள்ளது.இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி, சேசிஸில் பொருத்தப்பட்டுள்ளதால், பேருந்தின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும். இது, பேருந்தின் நிலைத்தன்மை மற்றும் கையாளுதலை எளிதாக்கும். பேட்டரி திறன் தேவைக்கேற்ப, 189 கி.வாட்.ஹார்., முதல் 423 கி.வாட்.ஹார்., வரை வழங்கப்படுகிறது.இந்த பேருந்தின் ரேஞ்ச், 250 கி.மீ., முதல் 300 கி.மீ., ஆக உள்ளது. டூயல் கன் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளதால், முழு சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரமாகும்.நீளம் 12 மீட்டர் இருப்பதால், குறைந்தபட்சம் 39 பேர் வரை பயணிக்கலாம். மேலும், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதி, ஏர் சஸ்பென்ஷன்கள், தீ அணைக்கும் அமைப்பு, பலகட்ட பேட்டரி பாதுகாப்பு, பயணியர் எண்ணிக்கை அமைப்பு, ஆட்டோ 'ஏ.சி' ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பேட்டரி - 189 - 423 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் - 315 ஹெச்.பி.,டார்க் - 3,100 என்.எம்.,ரேஞ்ச் - 250 - 300 கி.மீ.,பயணிகள் - 39 பேர்
03-Dec-2024