டாடா ஏஸ் கோல்டு பிளஸ் குறைந்த பராமரிப்புடன் வரும் சின்ன யானை
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், 'ஏஸ் கோல்டு பிளஸ்' என்ற புதிய மாடல் இலகுரக சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம், கன்டெய்னர், கேபின் சேசிஸ் என்ற வெவ்வேறு உடல் அமைப்புகளில் வருகிறது. கடைசி மைல் விநியோகம், நகர்ப்புற சரக்கு போக்குவரத்து, சிறிய வணிகங்கள், இ - வணிகம் உள்ளிட்டவைக்கு, இது பயன்படுகிறது. இந்த வாகனத்தில், நச்சு வெளியேற்றம் மற்றும் பராமரிப்பை குறைப்பதற்காக, எக்ஸாஸ்ட் அமைப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது. வெளியேறும் 'நைட்ரஸ் ஆக்சைடு' நச்சு உமிழ்வை அகற்றுவ தற்கு, 'எல்.என்.டி.,' என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஒவ்வொரு முறையும் 'ஏட் ப்ளூ' என்ற டீசல் எக்ஸாஸ்ட் திரவம் நிரப்ப வேண்டிய அவசியம் இருக்காது.