உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / 15 லட்சம் லாரிகளை விற்று டாடா சாதனை

15 லட்சம் லாரிகளை விற்று டாடா சாதனை

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், நாடு முழுதும் 15 லட்சம் இலகு மற்றும் நடுரக வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.இது, 4 முதல் 19 டன் வகையிலான லாரிகள் மற்றும் டிப்பர்கள் ஆகும். குறிப்பாக, விவசாயம், இ - வணிகம், கட்டுமான மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை கொண்டாடும் வகையில், எஸ்.எப்.சி., எல்.பி.டி., மற்றும் எல்.பி.கே., என்ற வெவ்வேறு கேபின் வகையில் புதிய லாரி மற்றும் டிப்பர்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, முதல் முறை வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக நிதி வசதி மற்றும் 6 ஆண்டு வாகன உத்தரவாத நீட்டிப்பு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி