முதல் முறையாக பெட்ரோல் இன்ஜினில் வரும் டாடா சபாரி எஸ்.யூ.வி.,
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'சபாரி' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், ஆறு மற்றும் ஏழு சீட்டர் வகையில் வருகிறது. இதுவரை, 2 லிட்டர் டீசல் இன்ஜினில் மட்டுமே வந்த இந்த கார், முதல் முறையாக 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினில் கிடைக்கிறது. இது, 'ஹேரியர்' 2026 மாடல் காரில் வரும் அதே இன்ஜின் ஆகும். டீசல் இன்ஜினை விட, பெட்ரோல் இன்ஜின் காரின் எடை 80 கிலோ குறைவாக உள்ளது. இரு இன்ஜின்களுக்கும், 6 - ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ டார்க் கன்வர்ட்டர் கியர் பாக்ஸ்கள் கிடைக்கின்றன. ஆனால், 4 - வீல் டிரைவ் வழங்கவில்லை.