டாடா டியாகோ 2026 சி.என்.ஜி.,க்கு ஆட்டோ கியர்பாக்ஸ்
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'டியாகோ' ஹேட்ச்பேக் காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் ஆறு மாடல்களில் வரும் இந்த காரில், உட்புற, வெளிப்புற மாற்றங்கள், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள 1.2 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., இன்ஜின்கள் தொடர்கின்றன. இரு இன்ஜின்களுக்கும், 5 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 'ஏ.எம்.டி.,' ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. சி.என்.ஜி., மாடல் முதல் முறையாக ஆட்டோ கியர்பாக்ஸில் வருகிறது.