உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / என்னை பாதுகாக்கும் லேண்ட்ரோவர்

என்னை பாதுகாக்கும் லேண்ட்ரோவர்

ஒரு இடத்துக்கு காரில் போய் இறங்குவதே கெத்துதான். அதுவும் விலை உயர்ந்த லேண்ட்ரோவர் டிஸ்கவரி போன்ற கார் என்றால்...?''அந்த பீலிங்கை நன்றாகவே உணர்கிறேன்,'' என்கிறார் கோவையின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமாரசாமி.''இது, இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் பிரத்யேக கார். உள்பகுதி ரூப்டாப், சீட், இன்டீரியர், சக்கரங்களை நம் விருப்பப்படி(கஸ்டமைஸ்) செய்து கொள்ளலாம். இந்த வகை கார்களை, முன்பதிவு செய்த பின்பே உற்பத்தியை துவக்குவர். நல்ல பாதுகாப்பு வசதிகளை கொண்டது. அதிக சக்தி வாய்ந்த 2 மற்றும் 3 லிட்டர் இன்ஜினில் இயங்குகிறது. 'க்ரூஷ் கன்ட்ரோல்' வசதி உள்ளது. குறிப்பிட்ட வேகத்தில் கார் செல்லவும், இடையில் தடை ஏற்பட்டால், தானாக நிற்கும் வசதியும் உள்ளது. மலை பயணத்தின் போது, வளைவுகளுக்கேற்ப தானாகவே சக்கரங்களை திருப்பிக்கொள்ளும் வசதி உள்ளது. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோபார்க்கிங் வசதி என்று ஏராளமான வசதிகள் உள்ளன. கார் முழுக்க 'சென்சார்' உண்டு. தொலைதுார பயணத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்,''விலை: ரூ.1.3 கோடிமைலேஜ்: 10 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை