மஹிந்திரா பி.இ., 6 ஸ்போர்ட்டெக் இ.வி., பேட்டரி சார்ஜ் முடிந்தாலும், 24 கி.மீ., பயணிக்கலாம்
'மஹிந்திரா' நிறுவனம், 'பி.இ., 6' மின்சார எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 'பி.இ., 6 ஸ்போர்ட்டெக்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், தற்போது வாடகை பேட்டரி முறையில் 11.45 லட்சம் ரூபாயில் வந்துள்ளது. இத்திட்டத்தில், ஒரு கி.மீ., ருக்கு 3.75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ரியர் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த காரில், ஏற்கனவே 59 மற்றும் 79 கி.வாட்.ஹார்., பேட்டரிகள் இருந்த நிலையில், தற்போது 70 கி.வாட்.ஹார்., பேட்டரியிலும் கிடைக்கிறது. முழு சார்ஜில், 548 கி.மீ., முதல் 683 கி.மீ., வரை பயணிக்க முடியும். பேட்டரி வகையை பொறுத்து காரின் பவர் மாறுபடுகிறது. உயர் ரக பேட்டரி காரில், 100 கி.மீ., வேகத்தை எட்ட 6.4 வினாடி எடுகிறது.