| ADDED : ஜூலை 03, 2024 09:14 AM
'ஜீப் இந்தியா' நிறுவனம், 15 முதல் 20 லட்சம் ரூபாயிலான, 'ரெனகேட்' என்ற மிட் சைஸ் எஸ்.யு.வி.,யை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது இந்த கார் மேம்பாட்டில் உள்ளது.அடுத்த தலைமுறை காம்பஸ் எஸ்.யு.வி., காரின் மேம்பாடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய வகை ஜீப் எஸ்.யு.வி., களமிறங்குவது ஜீப் பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.இதன் விலையை குறைக்க, ஜீப்பின் துணை நிறுவனமான சிட்ரான் சி - 3 கார்களின் தயாரிப்பு தளத்தில் கட்டமைக்கப்பட உள்ளது.காரின் நீளம், 4.2 மீட்டராக இருக்கும் என்பதால், பி.எம்.டபுள்யு மற்றும் பி.எஸ்.ஏ., நிறுவனங்கள் உருவாக்கி உள்ள 1.6 லிட்டர் டைரெக்ட் இன்ஜெக் ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம்.இந்த இன்ஜின், வெளிநாடுகளில் இயங்கி வரும் சிட்ரான் சி - 5 ஏர்கிராஸ் பெட்ரோல் கார்களில் பயன்படுத்தப்படுகிறது.