மேலும் செய்திகள்
'ஆப்ரோட் போக்கஸ்' 2025 டிபென்டர் ஆக்டா
09-Apr-2025
'போக்ஸ்வேகன்' நிறுவனத்தின், 'டிக்வான் ஆர் லைன்' எஸ்.யூ.வி., கார், அடுத்த மாதம் 14ம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், இதன் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த கார், முழுமையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது, 204 ஹெச்.பி., பவரையும், 320 என்.எம்., டர்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினுடன், 7 ஸ்பீடு டி.சி.டி., ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்படுகிறது. 100 கி.மீ., வேகத்தை, வெறும் 7.1 வினாடியில் எட்டுகிறது. டாப் ஸ்பீடு 229 கி.மீ.,ராக உள்ளது. இந்த கார், ஆறு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை, 50 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.
09-Apr-2025