உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / டி.வி.எஸ்., அட்வெஞ்சர் பைக் ரெடி

டி.வி.எஸ்., அட்வெஞ்சர் பைக் ரெடி

'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், அதன் முதல் அட்வெஞ்சர் பைக்கை சோதனை செய்து வருகிறது. இது, முழுமையான ஆப்ரோடு பைக்காக இல்லாமல், டூரிங் பைக்காவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த பைக்கில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 300 சி.சி., 'ஆர்.டி., - எக்ஸ்.டி., 4' என்ற ஏர் மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, 19 மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன்கள், ரைட் பை வொயர் தொழில்நுட்பம், ரைட் மோடுகள், டிராக் ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை இருப்பதாக கூறப்படுகிறது.இந்த பைக், நடப்பாண்டின் முதல் காலாண்டில் அறிமுகப் படுத்தப்படும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ