உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / போலோ ரசிகர்களுக்காக போக்ஸ்வேகன் பாக்கெட் ராக்கெட்

போலோ ரசிகர்களுக்காக போக்ஸ்வேகன் பாக்கெட் ராக்கெட்

'போக்ஸ்வேகன்' நிறுவனம், 'கோல்ப் ஜி.டி.ஐ.,' என்ற அதிவேக ஹேட்ச்பேக் காரை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வர உள்ள நிலையில், ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டில் இறக்குமதி ஆக உள்ளது.இந்நிறுவனத்தின் முதன்மை காராக விளங்கும் இந்த கார், ஆண்டுக்கு 2,500 கார்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும். இதில் இருக்கும், 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் இந்த காரின் சிறப்பம்சம். வெறும் 6 வினாடிகளில் 100 கி.மீ., வேகத்தை எட்டும் வகையில், 265 ஹெச்.பி., பவரையும், 370 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டாப் ஸ்பீடு 250 கி.மீ., ஆகும்.இறக்குமதி என்பதால், இந்த காரின் விலை 40 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காருக்கு, 'மினி கூப்பர் எஸ்' கார் போட்டியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை