வொர்க்மாஸ்டர் 105 டிராக்டர் ஏசி, கேபின் வழங்கும் நியூ ஹாலாண்டு
'நியூ ஹாலாண்டு' டிராக்டர் நிறுவனம், 'வொர்க்மாஸ்டர் 105' என்ற புதிய டிராக்டரை அறிமுகம் செய்துள்ளது. இது, உள் நாட்டில் உற்பத்தியாகும் இந்நிறுவனத்தின் அதிக பவர் கொண்ட டிராக்டர் ஆகும். கேபினுடன் மற்றும் கேபின் இல்லாமல் என இரு உடல் அமைப்புகளில் வந்துள்ளது.இந்த டிராக்டர், 3,387 சி.சி., 4 - சிலிண்டர், டீசல் இன்ஜினில் வருகிறது. இந்த இன்ஜினுடன், 20 பிரண்ட் மற்றும் ரிவர்ஸ் கியர்கள் கொண்ட கியர்பாக்ஸ் மற்றும் 4 -வீல் டிரைவ் அமைப்பு இணைக்கப் பட்டுள்ளது. இதில், எரிவாயு செலவை குறைத்து, 90 சதவீதம் நச்சு உமிழ்வை தடுக்கும் நவீன எக்ஸாட்டு அமைப்பு வருகிறது.