உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கேட் விரைவில் துருப்பிடிப்பதை தவிர்க்க செய்ய வேண்டியதென்ன?

கேட் விரைவில் துருப்பிடிப்பதை தவிர்க்க செய்ய வேண்டியதென்ன?

நான் தற்பொழுது வீடு கட்ட உள்ளேன். சைட் ரோட்டை விட இரண்டு அடி பள்ளத்தில் உள்ளது. எனது வீட்டின் அஸ்திவார உயரம் எவ்வளவு வைப்பது?-கோபிநாத், சுந்தராபுரம்.உங்கள் நிலத்திற்கு அருகே, ரோட்டின் மட்டத்திலிருந்து மூன்று அடி உயரத்தில் அஸ்திவாரத்தை உயர்த்தி வைக்க வேண்டும். நிலத்தின் மட்டத்திலிருந்து, 4 முதல், 5 அடி உயரம் வைத்துக் கொள்ளலாம். அரசு தற்பொழுது பழைய முறையில் இல்லாமல், ரோட்டை தோண்டி எடுத்து மீண்டும் ரோடு அமைக்கிறார்கள். அதனால் நீங்கள், 3 அடி வைத்தாலே சரியாக இருக்கும்.எங்கள் வீடு கட்டி, ஐந்து வருடங்கள் ஆகிறது. வீட்டின் எலிவேஷனுக்காக வைத்த, 'லேசர் கட்டிங் டிசைன்' கிரில்களும் முன்புற கேட்டும், துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு விரைவாக துருப்பிடிக்க என்ன காரணம்? -பழனியப்பன், வடவள்ளி.நீங்கள் வைத்திருக்கும் லேசர் கட்டிங் டிசைன் மற்றும் கேட்டில், தரமான இரும்பு உபயோகப்படுத்தவில்லை என தெரிகிறது. தரம் இல்லை என்றால், சீக்கிரம் துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். அதை சரி செய்வதற்காக, ஏற்கனவே இருக்கும் துருக்களை நீக்கி விட்டு, பிரைமர்கோட் அடித்தபிறகு, மார்க்கெட்டில் கிடைக்கும் தரமான பெயின்ட் அடித்து, இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.நாங்கள் கட்டி வரும் வீட்டில் உள்ள பில்லர் கம்பிகள், நிறம் கருப்பாக மாறி வருகிறது. சில கம்பிகளை சுற்றி, பூஞ்சை பூத்தது போல் இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?-ராஜ்குமார், காரணம்பேட்டை.நீங்கள் கட்டி வரும் வீட்டிலுள்ள நீரின் தன்மையை ஆராய்ந்து, அதற்குப் பிறகு பயன்படுத்த வேண்டும். உப்பு அதிகம் உள்ள தண்ணீரை பயன்படுத்தும் போது, இம்மாதிரியான பிரச்னைகள் வருவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. எனவே, உங்கள் போர்வெல்லில் உள்ள தண்ணீரை பரிசோதித்த பிறகு பயன்படுத்த வேண்டும். இதற்கென, 'ஆன்டி கரோஷன் பெயின்ட்', மார்க்கெட்டில் கிடைக்கிறது. இந்த பெயின்ட் அடித்த பிறகு பயன்படுத்தலாம்.பாத்ரூமில் டைல்ஸ் ஒட்டும் போது, தண்ணீரில் ஊற வைத்துதான் ஒட்ட வேண்டுமா?-சுந்தர், செல்வபுரம்.சிமென்ட் கொண்டு ஒட்டினால், கண்டிப்பாக ஊற வைத்து தான் ஒட்ட வேண்டும். அப்பொழுதுதான் டைல்ஸ் நன்றாக ஒட்டும். தற்போது மார்க்கெட்டில் டைல்ஸ் ஒட்டுவதற்கென்று, பிரத்யேக 'டைல்ஸ் பேஸ்ட்' கிடைக்கிறது. அவற்றைக் கொண்டு ஒட்டும்போது, டைல்ஸ் ஊற வைக்க வேண்டிய அவசியம் இருக்காது; நன்றாகவும் ஒட்டும்.- பொறியாளர் மணிகண்டன், பொருளாளர்,கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !