ஒயிட் சிமென்ட் அடிக்காமல் பட்டி வைக்கலாமா?
வடிகால் வெளியேற: -செந்தில்: சோக்பிட்டில் கருங்கல் பயன்படுத்தக் கூடாது. ஓடை கல் பயன்படுத்தினால் சிறந்தது அல்லது ஐந்து அடி ரிங்கை எட்டு அடி ஆழத்துக்கு போட்டு, அதன் பக்கப்பகுதியில் மூன்று இஞ்ச் ஓட்டை போட்டு விட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால், கூடுதல் நாட்கள் சோக்பிட் நிறையாமல் நீடிக்கும். வீடு கட்டும்போது சுவர் முழுவதும் கட்டி முடிக்காமல்: -லட்சுமி: தரைத்தளத்திற்கு நிரப்பப்பட்ட, மண்ணின் ஈரத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை இவற்றை உறுதி செய்து, தரை தளத்திற்கு கம்பி இல்லாத சிமென்ட் கான்கிரீட்(பிளெயின் சிமென்ட் கான்கிரீட்) போட்டுவிட்டு, சுவர் கட்டும் முறையே சிறந்தது. நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளோம். சுவர் அமைக்க எடை குறைவான ஏ.ஏ.சி.: -அரவிந்த்: 'காலம் பீம்' இவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்ட கட்டடங்களுக்கு, ஏ.ஏ.சி., கற்களை பயன்படுத்தலாம். பொதுவாக ஏ.ஏ.சி., கற்களை பயன்படுத்தும் போது, அதற்குண்டான பசையை சரியான விகிதத்தில், முறையாக பயன்படுத்த வேண்டும். புதிதாக வீடு கட்ட உள்ளேன். தற்போது மணல்: -சுரேஷ்: 'இன்டர் லாக்' கொண்டு வீடு கட்டும் போது, சிமென்ட் கலவை தேவைப்படாது. அதனால், செலவு குறைவாகும் என்பது சரி. இந்த வகையான கட்டுமானங்கள் வலிமையானதாக இருக்கும். விரைவாகவும், எளிதாகவும் சுவர்களை எழுப்பலாம். நாங்கள் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு அறைக்கும் எத்தனை ஜன்னல்கள் வைக்க வேண்டும்?: - -கருப்புசாமி: ஒவ்வொரு அறையிலும் வெளிச்சம் அவசியம். அதைவிட உஷ்ணத்தை குறைக்க அல்லது உஷ்ணத்தை வெளியேற்ற காற்றோட்டம் அவசியம். வீட்டின் எந்த அறையாக இருந்தாலும், குறைந்தது இரண்டு ஜன்னல்கள் வைக்க வேண்டும். அறையின் நீளம், அகலம் மற்றும் பரப்பளவிற்கு ஏற்ப ஜன்னல்களின் எண்ணிக்கையை கூட்டலாம் அல்லது ஜன்னல்களின் அளவை பெரிதாக வைக்கலாம். எனது வீட்டின் மின் விளக்குகள் சீராக எரியாமல்: -கோபி: மின் கம்பத்திலிருந்து உங்கள் வீட்டிற்கு வரும் மின் இணைப்பில், 'நியூட்ரல்' இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம். நீங்கள் சிறந்த மின் பொறியாளரை தொடர்பு கொண்டு, முறையான 'எர்த் பிட்' அமைத்தால் மின்னோட்டம் சரியாக இருக்கும். புதிய வீட்டின் சுவர்களுக்கு: -விக்னேஸ்வரன்: தற்போது மார்க்கெட்டில் விற்கப்படும் பெரும்பாலான பட்டி ஒயிட் சிமென்ட்டை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே, அந்த பட்டியை சுவற்றில் வைப்பதற்கு முன்பு, 'ஒயிட்வாஷ்' செய்ய வேண்டிய அவசியம் இல்லை. -கவிராஜ்: இணை பொருளாளர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).: