உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / பசுமை கான்கிரீட்தான் எதிர்காலம்; அடித்துச்சொல்கிறார் கொஜினா பொருளாளர்

பசுமை கான்கிரீட்தான் எதிர்காலம்; அடித்துச்சொல்கிறார் கொஜினா பொருளாளர்

கட்டட உலகின் மையம் கான்கிரீட் தான். பாரம்பரிய கான்கிரீட் உற்பத்தி முறைகள் இயற்கையின் நலனை, மெதுவாக சிதைக்கும் சக்தியாகவே மாறிவிட்டன. இதை இன்று உணராமல் விட்டால், நாளைய இயற்கை, நம்மை நேரில் வந்து பொறுப்புக்கேட்கும். இந்த சூழலை சீராக்கும் நோக்கத்தில் உருவாகியதுதான் பசுமை கான்கிரீட்.கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்க (கொஜினா) பொருளாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது:பசுமை கான்கிரீட் என்பது, மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் இயற்கைக்கு நேரடி பாதிப்பில்லாத பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும், சுற்றுச்சூழலுக்கு உகந்த கான்கிரீட் வகை. இதில், மின் உற்பத்தி நிலைய சாம்பல், பிளாஸ்ட் பர்னஸ் ஸ்லாக், மரத்துாள், கசடு, சுரங்க கழிவுகள், மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட் துண்டுகள், எரிபொருள் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கண்ணாடி துாள் ஆகிய அனைத்தும், பராமரிப்பு குறைவான கட்டடங்களை உருவாக்க உதவுகின்றன.இது, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு வாயிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். பாரம்பரிய கான்கிரீட்டின் ஒத்த பண்புகளுடன், இது தடிமனான, நிலையான கட்டுமானங்களை உருவாக்கும் திறன் கொண்டது.இன்று, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பொறுப்புடன் கட்டுமானம் செய்யும் நிறுவனங்கள் பசுமை கான்கிரீட்டை விரும்பி பயன்படுத்துகின்றன.வீடு என்பது வெறும் கட்டடம் அல்ல; அதில் உறவுகள், கனவுகள், வாழ்க்கை வளம் நிரம்பி இருக்க வேண்டும். இந்தக் கனவுகள், சுற்றுச்சூழலை சீராக்கும் வழியில் உருவாக்கப்பட வேண்டும். பசுமை கான்கிரீட் இந்த எண்ணத்திற்குத் தகுந்த தீர்வு.சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பசுமை கான்கிரீட் என்பது, எதிர்கால கட்டடத் தொழிலின் தகுதிச் சான்றிதழ்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி