உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீட்டினுள் நீர்க்கசிவு ஏற்படுவது எப்படி?

வீட்டினுள் நீர்க்கசிவு ஏற்படுவது எப்படி?

சுமார் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை, வீட்டிற்கு பெயின்ட் அடிக்க வேண்டும்?-பாலா, செட்டிபாளையம்.நீங்கள் வீட்டிற்கு அடிக்கும் பெயின்டின் தரத்தைப் பொறுத்து, அதன் வருடங்கள் மாறுபடும். ஐந்து முதல் ஏழு வருடங்களுக்குள் வீட்டிற்கு பெயின்ட் அடிப்பது அவசியம்.நான் வீடு கட்டி சில வருடங்கள் ஆகின்றன. வீட்டினுள் 'எலக்ட்ரிக்கல் பாக்ஸ்' அருகில் நீர்க்கசிவு உள்ளது. இதற்கு காரணம் என்ன?-செல்வராஜ், கிணத்துக்கடவு.உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரில், எலக்ட்ரிக்கல் பைப்புகள் சுவரின் மட்டத்திற்கு இருக்கலாம். அந்தப் பைப்பின் வழியாக நீர்க்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. சில 'ஜங்ஷன் பாக்ஸ்'கள் சரியான முறையில் பேக் செய்யாமல் இருக்கலாம். இவற்றை சரி செய்தாலே, நீர் கசிவை தடுக்க முடியும்.வீட்டிற்குள் வரும் வெப்பத்தை தணிக்க, 'பால்ஸ் சீலிங்' அமைத்தால் போதுமா?-ஜெயக்குமார், தொண்டாமுத்துார்.வீட்டிற்குள் வரும் சூட்டை தவிர்ப்பதற்கு, மொட்டை மாடியில் ஓடுகளை பதிக்கலாம். அல்லது 'கூலிங் கோட்' எனப்படும் பெயின்ட் அடிக்கலாம். பால்ஸ் சீலிங் அமைப்பதன் மூலமும் குறிப்பிட்ட அளவிற்கு சூட்டை தணிக்க முடியும்.நான் தற்பொழுது வீடு கட்டிக் கொண்டு உள்ளேன். இதில் வெளிப்புறம் அமைந்துள்ள டாய்லெட்டில் வாஷிங் மெஷின் வைக்கலாமா?-ராஜேந்திரன், வெள்ளலுார்.நீங்கள் வெளிப்புறம் அமைய உள்ள டாய்லெட்டுக்கு, அருகில் சிறிய அளவில் இருந்தாலும் தண்ணீர் படாத இடத்தில் வைப்பது சிறந்தது. டாய்லெட்டின் உட்புறத்தில், வாஷிங் மெஷினை வைப்பதை தவிர்க்கவும். மின்சார சாதனங்களை குளியலறையில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.வீட்டில் மின்சார செலவை குறைப்பதற்கு, எந்த வகையான மின் விசிறிகளை பயன்படுத்தலாம்?-சாவித்திரி, துடியலுார்.தற்பொழுது அனைத்து நிறுவனங்களும் 'பிஎல்டிசி' முறையில், மின் விசிறிகளை தயாரிக்கின்றன. இந்த மின் விசிறிகள் அதிக அளவு மின்சாரத்தை சேமிக்கும். இதில் ரிமோட் கொடுப்பதால், நீங்கள் இருந்த இடத்தில் இருந்து பயன்படுத்த முடியும். தேவையில்லாத மின் சாதனங்களை, அணைத்து வைப்பதன் மூலம் மின்சார செலவைக் குறைக்கலாம்.வீட்டிற்கு 'டிவி' அல்லது புரொஜெக்டர் ஸ்கிரீன் பயன்படுத்துவது சிறந்ததா?-சார்லஸ், வடவள்ளி.வீட்டிற்கு பயன்படுத்தும் பொழுது, சிறிய அளவிலான அறைகளுக்கு டிவிகளை பயன்படுத்தலாம். பெரிய ஹால்களுக்கு ஹோம் தியேட்டர் அல்லது புரொஜெக்டர் மற்றும் ஸ்கிரீன் கொண்டு உபயோகித்தால், சிறப்பாக படங்களை கண்டு களிக்கலாம்.-ராஜரத்தினம்,செயலாளர்,கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை