20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய சொத்து ஆவணத்தில் பிழை திருத்தம் செய்வது எப்படி?
கோவை, வடவள்ளி, மஹாராணி அவென்யூவில் புதிதாக வந்திருக்கும், யோகலட்சுமி நகரில் சென்ட்க்கு என்ன விலை கொடுக்கலாம்.-சந்திரசேகரன், கோவை.தாங்கள் கூறும் மஹாராணி அவென்யூ காலியிடமாக, வடக்கு-கிழக்கு பார்த்திருந்தால், சென்ட் ரூ.14 லட்சத்துக்கும், தெற்கு-மேற்காக இருந்தால் ரூ.13 லட்சத்துக்கும் வாங்கலாம். ஆனால், காலியிடம் இல்லாமல் வீடு கட்டப்பட்டு இருக்குமேயானால், சென்ட்டுக்கு ரூ.2 லட்சம் குறைத்து மதிப்பிட்டு, அத்துடன் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தின் வயதை பொறுத்து, மதிப்பை சேர்த்து விலையை தீர்மானித்துக்கொள்ளலாம்.கோவை, வேடபட்டியில் 'கேட்டெட் கம்யூனிட்டி'. சுற்றிலும் வீடுகள் உள்ள நிலையில், நிலம் என்ன விலைக்கு போகிறது?-விக்ரம், வேடபட்டி.'கேட்டெட் கம்யூனிட்டி'க்குள் காலியிடமாக இருக்குமானால் ரூ.10 லட்சம் எனவும், வீடு கட்டப்பட்டிருந்தால் சென்ட் ரூ.8.5 லட்சம் எனவும் கணக்கிட்டு பார்க்கவும். இதுபோல் 'கேட்டெட் கம்யூனிட்டி'யில் புரமோட்டர்கள் காலியிடமாக தர மாட்டார்கள். வீடு கட்டித்தான் தருவேன் என சொல்லுவார்கள். பார்த்து விலை பேசிக்கொள்ளவும்.கோவை, மாதம்பட்டி ரோடு, ஆலாந்துறை கிராமத்தில் நான்கு ஏக்கர் இடம் மற்றும், 8,000 சதுரடி தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம், பணியாளர்கள் குடியிருப்பு, 2,000 சதுரடி கொண்ட 'ரிசார்ட்' என்ன விலைக்கு வாங்கலாம்.-மகேஸ்வரன், கோவை.தாங்கள் கூறிய இடமானது கோவையில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ளது. ரிசார்ட்கள் நிறைய உள்ளன. விளை நிலங்கள் குறைவாகவே உள்ளன. இங்கு பொதுவாக சீசன் மற்றும் சீசன் அல்லாத சமயம் என்று இல்லை. பொதுவாக வார இறுதியில் மட்டும்தான் அதிக நபர்கள் வருவார்கள். மேற்கண்ட காரணங்களால் இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும்.நான் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய, சொத்தின் விபர அட்டவணையில் ஒரு பிழையை தற்போதுதான் பார்க்க நேர்ந்தது. தற்போது விற்றவர் உயிருடன் இல்லாத நிலையில், நான் யாரிடம் பிழை திருத்த பத்திரம் எழுதி பெறுவது.-பாபு, கோவை.இறந்துபோன விற்றவரின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றுடன், இந்த விபரங்களை பிழைத்திருத்த பத்திரம் தயார் செய்து, அவரின் வாரிசுதாரர்களை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அழைத்து சென்று, ஒப்பமிடச்செய்துதான் அந்த பிழையை நேர் செய்ய இயலும்.-தகவல்: ஆர்.எம். மயிலேரு,கன்சல்டிங் இன்ஜினியர்.