உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கட்டட வடிவமைப்பில் புரட்சியை உண்டாக்கும் நேனோ ஆப்டிக்ஸ்

கட்டட வடிவமைப்பில் புரட்சியை உண்டாக்கும் நேனோ ஆப்டிக்ஸ்

கட்டுமான துறையில் தற்போது புத்தாக்கங்கள், நவீன தொழில்நுட்பங்களின் வருகை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் புகுத்தப்படும் நவீன அம்சங்கள், தற்போது நம் நாட்டு சந்தைகளிலும், பரவலாக கால் பதித்து வருகிறது.அந்த வகையில் ஒளி ஊடுருவக்கூடிய கற்காறை(டிரான்ஸ்லுசென்ட் கான்கிரிடே), 'நேனோ ஆப்டிக்ஸ்' என்ற கருத்தியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஆப்டிகல் பைபர்கள் ஒளியை சுவற்றின் ஒரு பக்கத்திலிருந்து, மற்றொரு பக்கத்திற்கு கடத்தும் வகையில், துவாரங்களாக செயல்படுகின்றன.பி.ஏ.ஐ., கோவை மைய செயற்குழு உறுப்பினர் அரவிந்த் நெப்போலியன் கூறியதாவது:இந்த ஆப்டிகல் பைபர்கள், கற்காறையில் சமமாகப் பரவியுள்ளன. மற்றும் சுவற்றின் இரு புறங்களிலும் காணக்கூடியவையாக இருக்கும். ஒரு பக்கத்தில் குறிப்பிட்ட வடிவங்கள் உருவாகும் போது, அவை கற்காறையின் மறுபுறத்தில் மங்கலான உருவங்களாக தோன்றுகின்றன.இதன் மூலம் கட்டடக்கலையில் மாற்று வடிவம் மற்றும் அழகியல் சாத்தியமாகிறது. மெல்லிய கற்காறை(சிமென்ட் மற்றும் மணல்) மற்றும் ஆப்டிகல் நாண்கள் மூலப்பொருட்களை இணைப்பதன் மூலம், இந்த கற்காறை தயாரிக்கப்படுகிறது.இந்த ஆப்டிகல் பைபர்கள், கற்காலையில் உபயோகப்படுத்தப்படும் ஜல்லி கற்களுக்கு மாற்றாகவும் அமைகிறது. ஏனெனில், அவை பைபர் நுால்களை சேதப்படுத்தி, ஒளி கடப்பதை தடுக்கலாம். மிகக்கூடுதலாக, இவை செயற்கை மற்றும் இயற்கை ஆதாரங்களிலிருந்து ஒளியை, 60 டிகிரி பாகை கோணத்திற்கும் மேலாக கடத்தும் திறன் கொண்டது.நேரான வழியில் மட்டுமல்லாமல் கோணத்திலும் ஒளி பரவக்கூடிய, இந்த கற்காரையானது பாரம்பரிய முறைப்படி செய்யக்கூடியது போன்றதுதான். முக்கிய வேறுபாடு என்றால், கலவை தொகுப்பின் அடிப்படையில், 4-5 சதவீதம் ஆப்டிக்கல் பைபர்கள் சேர்க்கப்படுகிறது. இந்த கலவையை தயாரிக்க, விரைவாக உறையும் சிமென்ட் பயன்படுத்தப்பட வேண்டும். இவை வெளிப்புறச்சுவர்களாகவும், பகிர்வு சுவர்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் பகல் நேரத்தில் உட்புற பகுதியை வெளிச்சமிடுவதன் மூலம், உட்புற அழகை அதிகரிக்கிறது.இந்த முறை கலவையில், ஆப்டிகல் பைபர்களை சேர்க்கும் செயல்முறைக்கு தேர்ச்சியுள்ள தொழிலாளர்கள் இங்கு இல்லை. தற்போதுதான் நம் நாட்டில், இதற்கான தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை