உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / 20 அடி தார் சாலையை ஒட்டி குடியிருப்பு பகுதி இங்கு என்ன விலை கொடுத்து இடம் வாங்கலாம்?

20 அடி தார் சாலையை ஒட்டி குடியிருப்பு பகுதி இங்கு என்ன விலை கொடுத்து இடம் வாங்கலாம்?

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுக்கா, தேவனாம்பாளையம் கிராமத்தில், 30 அடி தார் சாலையில் இரண்டு ஏக்கர் காலியிடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?-கார்த்திகாதேவி, சிங்காநல்லுார்.தற்போது உள்ள சூழலில், தாங்கள் கூறும் இடமானது குடியிருப்பு மற்றும் தொழில்கள் சார்ந்த சைட்டிற்கு ஓகே. கோவை மாநகரில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ளது தெரிகிறது. தாங்கள் கூறும் காலி இடத்தில், தொழிற்சாலை கட்டடமாக கட்டி வாடகைக்கு விடும் பட்சத்தில் சதுர அடிக்கு ரூ.8 கிடைத்தால், ஒரு ஏக்கருக்கு ரூ.1 கோடியில் இருந்து, ரூ.1.25 கோடி வரை கொடுக்கலாம். இதே இடம் லே-அவுட்டாக பிரிக்க வாய்ப்பு இருந்து, அவ்வாறு, 3 முதல் 5 சென்ட் ஆக பிரித்து விற்கும்போது சென்ட், ரூ.4 லட்சம் வரை போகுமா என்பதை விசாரித்து, ஆம் என்றால் மேலே சொன்ன மதிப்பு சரியானது. திருப்பூர் மாவட்டம், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பெருமாநல்லுார் செல்லும் வழியில், 5 கி.மீ., தொலைவில், நெருப்பெரிச்சல் சந்திப்பில் இருந்து, உட்புறமாக ஒரு கி.மீ., தொலைவில், 30 அடி ரோட்டை ஒட்டி, 10 சென்ட் இடம் என்ன விலை கொடுத்து வாங்கலாம்?- மணிகண்டன், பெருமாநல்லுார்.இந்த இடம், திருப்பூர் நகரின் மையப்பகுதியில் இருப்பதாக தெரிகிறது. திருப்பூர் மாநகராட்சிக்குள் இருக்க வாய்ப்புள்ளது. கமர்சியலாகவோ அல்லது அபார்ட்மென்ட் ஆகவோ மாற்ற இயலும். இந்த காரணங்களால் சென்ட் ரூ.20 லட்சம் வரை கிடைக்கும். இந்த இடம், டி.டி.சி.பி., மற்றும் 'ரெரா' ஆகியவற்றில் அங்கீகாரம் பெற்ற விவரம் தெரிவிக்கப்படாததால், மேலே உள்ள மதிப்பு அதை அனுசரித்து கூடவோ, குறையவோ வாய்ப்புண்டு. கோவை மாவட்டம், சூலுார் தாலுக்கா காமநாயக்கன்பாளையத்தில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில், 20 அடி தார் சாலையை ஒட்டி குடியிருப்பு பகுதியாக, நான்கு சென்ட் இடம் என்ன விலை கொடுத்து வாங்கலாம்?-பெருமாள், கோவை.தாங்கள் கூறும் இடம் தற்போது அதிகமாக வளர்ச்சியடைந்து உள்ளது. அந்த இடத்தை சுற்றி மூன்று கி.மீ., தொலைவில், இண்டஸ்ட்ரியல் மற்றும் காற்றாலை மில்கள் மிகுந்த பகுதியாக உள்ளது. சென்ட் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கலாம். -தகவல்:ஆர்.எம்.மயிலேறு,கன்சல்டிங் இன்ஜினியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை