குடும்பத்தின் ஆரோக்கியம் காக்கும் சமையலறை எப்படி இருக்க வேண்டும்?
சமையலறை என்றாலே மகிழ்ச்சியோடு கூடிய, இனிமை ஏற்பட வேண்டும். அதற்கேற்ப நாம் சமையலறையை அமைத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு பல வழிவகைகளை சொல்கிறார், கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா) செயற்குழு உறுப்பினர் கட்டுனர் பத்மாவதி.வீட்டில் பூஜை அறைக்கு, அடுத்தபடியாக புனிதமாக கருதப்படுவது சமையலறை. நம்முடைய வீட்டில் வசிக்கும் அனைவரின், ஆயுள் ஆரோக்கியத்துக்கு சமையலறைக்கு முக்கிய பங்கு உண்டு.அந்த வகையில் சமையல் அறையை, சரியான திசையிலும், காற்றோட்டம் இருக்கும் வகையிலும் அமைக்க வேண்டும். சமையல் அறையை, அக்னி மூலையான தென்கிழக்கு மூலையில் அமைப்பது நல்லது.ஒரு சமையலறை குறைந்த பட்சம், 10 அடி நீளமும் 8 அடி அகலமும் இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஜன்னல்கள் அமைக்க வேண்டும். சமையலறை மேடையின் உயரம், 30 இன்ச் என்ற அளவிலும், அகலம் 24 இன்சுக்கு குறையாமலும் இருப்பது நல்லது. காலையில் சூரியக்கதிர்கள், சமையல் அறையில் விழும்படி ஜன்னல் அமைக்க வேண்டும்.இதனால் சமையலறை எப்போதும், உலர்ந்த நிலையிலும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க் பயன்படுத்துவது நல்லது. சமையலறையின் தரைதளம் வழுக்காத வகையில், டைல்ஸ் பதிப்பது நல்லது.சமையல் அறையில், புகை போக்கி அவசியம். சமையலறையில் எலக்ட்ரிக் சிம்னி வைப்பது வழக்கம். அது சிறந்த முறையும் கூட. மாடுலர் செல்ப்களை பயன்படுத்தினால், அறையை கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.