வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹோம் தியேட்டரின் குறைந்தபட்ச நீள அகல உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ?
கனவு இல்லங்களில் ஆடம் பர அறைகளுக்கு, மட்டுமின்றி பொழுதுபோக்குக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நீச்சல் குளம், 'ஹோம் தியேட்டர்' உள்ளிட்ட அம்சங்களுக்கு வரைபடம் தயாரிக்கும்போதே, அதற்கான கட்டமைப்பு தேவைகள் குறித்தும் பொறியாளர்களிடம் ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன.இவ்வாறு முன்னதாகவே திட்டமிட்டு, பொறியாளரிடம் ஆலோசனைகள் பெற்று கட்டமைப்புகளை மேம்படுத்தினால் எதிர்காலத்தில் பிரச்னைகள் இருக்காது.பரபரப்பான இக்காலகட்டத்தில், நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் 'தியேட்டர்' செல்வதை தவிர்க்கும் மக்கள் வீடுகளில், 'ஹோம் தியேட்டர்' வசதியை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.கட்டுமானத் துறையின் அபரித வளர்ச்சியால், நவீன கண்டுபிடிப்புகளும் கட்டுமானங்கள் சுலபமாக்கி வருகின்றன.அந்த வகையில், 'ஹோம் தியேட்டர்' கட்டுவதற்கென செங்கல், பால் சீலிங், வால் பேனலிங், புளோரிங் என அனைத்திலும் நவீனங்கள் புகுத்தப்படுகின்றன. இவை ஒலி, ஒளி அளவை உள்வாங்கும் தன்மை கொண்டவை.பொதுவாக, 'ஹோம் தியேட்டர்' நீளம் அதிகமான அறையில் இடம்பெற வேண்டும். அங்கு பொருத்தப்படும் கதவானது, அறையின் மையத்தில் இருந்தால் 'எபெக்ட்' நன்றாக இருக்கும்.'ஹோம் தியேட்டர்' முதல் தளத்தில் வருமானால், 'சன்கன்' பகுதி அமைத்து 'ஹோம் தியேட்டர்' பொருத்தி நிஜமான தியேட்டர் உணர்வை பெறலாம் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.
'கொசினா' முன்னாள் தலைவர் கார்த்திக் கூறியதாவது:நம் வீட்டில் 'ஹோம் தியேட்டர்' அமைக்கும்போது, அருகருகே வீடுகள் இருக்கும் பட்சத்தில் சண்டை காட்சிகள் உள்ளிட்டவை வரும்போது அதிக சத்தம் வெளியே கேட்கும்.இதை தவிர்க்க'அக்வஸ்டிக்' எனும் ஒலியை உள்வாங்கும் முறையில், ஹோம் தியேட்டர் அமைக்க வேண்டும். பால் சீலிங், வால் பேனலிங், புளோரிங் ஆகியவற்றையும் ஒலியை உள்வாங்கும் வகையில் அமைக்க வேண்டும். ஜன்னல், கதவும் இதற்கென்று பிரத்யேகமாக இருக்கிறது. துளைகள் உள்ள 'ஹாலோ' செங்கலில் ஸ்பான்ச், தெர்மாகோல் ஆகியவற்றை கொண்டு நிரப்பி கட்டலாம். இந்த வகை செங்கல் பயன்படுத்தினாலே, 30-40 சதவீதம் சத்தம் வெளியே போகாது; உள்வாங்கிவிடும்.எனவே, 'அக்வஸ்டிக்' முறையில் ஹோம் தியேட்டர்கள் அமைப்பது சிறந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஹோம் தியேட்டரின் குறைந்தபட்ச நீள அகல உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ?