உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / செய்திகள் / கட்டிய வீட்டை வாங்கப்போறீங்களா? வழிகாட்டுகிறார் காட்சியா உறுப்பினர்

கட்டிய வீட்டை வாங்கப்போறீங்களா? வழிகாட்டுகிறார் காட்சியா உறுப்பினர்

கனவு இல்லம் என்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு பெரும் கனவாகும். வாடகை வீடுகளில் வசித்துவருபவர்களுத்தான் சொந்த வீட்டின் அருமை தெரியும். எனவேதான், வாழ்வில் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கடன் வாங்கியோ, பத்திரத்தை அடகு வைத்தோ என கனவு இல்லங்களை எழுப்புகின்றனர்.அப்படி கட்டும் வீடுகளிலும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதிலும் மிகவும் கவனம் இருக்க வேண்டும். ஏதேனும் குறைகள் இருந்தால் பண ரீதியான செலவுகளுடன், மன ரீதியான பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என உஷார்ப்படுத்துகின்றனர் பொறியாளர்கள்.கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தை (காட்சியா) சேர்ந்த சரவணன் கூறியதாவது:உங்கள் கனவு இல்லம் என்பது, பல வருடங்களாக கண்ட கனவின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அதற்கான உங்களுடைய தேடல் என்பது தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.

கட்டி முடித்த வீடா?

கட்டி முடித்த வீட்டை நீங்கள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், அதில் பல்வேறு விஷயங்களை ஆராய வேண்டும். அதிலும், வீட்டின் வெளிப்புறத்தை மட்டும் பார்த்து வாங்குவது தவறு.குறிப்பிட்ட வீட்டை வாங்குவதற்கு முன் வீட்டின் பிளான், பிளான் அப்ரூவல், எலிவேஷன் மற்றும் வீடு அமைந்துள்ள இடம், அதன் தொலைவு மற்றும் உங்களது வசதிக்கேற்ப உள்ளதா என, தெரிந்த பின்னர் உங்களது வீட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வீட்டில் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கும் பொருள் மற்றும் அதன் தரம் குறித்து, ஆராய வேண்டும்.

பிளம்பிங், எலக்ட்ரிக்கல்

அந்த வீட்டின் ஸ்டிரக்சுரல் விபரம், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் என்பது மிக முக்கியமானது. இந்த விபரங்களை கட்டாயம் கேட்டு பெற வேண்டும். அப்போதுதான், அந்த வீடு எவ்வளவு தாங்குத்திறன் கொண்டது என்பதை அறியமுடியும்.பிற்காலத்தில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினாலோ அல்லது 'ப்ளோர் எக்ஸ்டென்ஸ்'க்கு வாய்ப்பு உள்ளதா என்பதையோ, அறிய முடியும்.எனவே, வீடு வாங்கும் போது மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் தெளிவாக கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை