உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / எங்கும் அலையாமல் இருக்க இணையம் உதவுது: கட்டட அனுமதி விபரங்கள் அளித்தாலே போதும்

எங்கும் அலையாமல் இருக்க இணையம் உதவுது: கட்டட அனுமதி விபரங்கள் அளித்தாலே போதும்

அரசின் சுயசான்றிடப்பட்ட கட்டட அனுமதி வழங்கும், தற்போதைய இணையதள வசதி ஒரு வரப்பிரசாதமாகும். இதேபோல் ஏனைய இணையதளத்தில் அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. இவை அனைத்துக்கும் எந்த அலுவலகத்திற்கும், நேரில் செல்ல வேண்டியதில்லை எனவும் தளத்தில் சொல்லப்பட்டுள்ளது.அரசின் இணையதளமான, tnurbanepay.tn.gov.inவாயிலாக அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பல சேவைகள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இது தற் போதுள்ள செயல்முைறயைவிட மிகவும் எளிதானதாது. இது ஒரு காகிதமில்லா முறையாகும்.பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:கட்டட அனுமதி வழங்கும் முறை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், வரி செலுத்துவதும் இந்த தளத்தின் மூலம் நடக்கிறது. இது சார்ந்த தேவைகளான காலியிட மனை வரி, சொத்து வரி, புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பம், பெயர் மாற்றம் ஆகியவைகளுக்கும் அங்கேயே வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.உதாரணமாக, காலியிட மனை வரி பெற சொத்து ஆவணம், அதன் வில்லங்க சான்று மற்றும் பட்டா நகல் ஆகியவற்றை பி.டி.எப்., ஆக பதிவேற்றம் செய்தாலே போதுமானது. பட்டா இல்லாவிடில் டி.எஸ்.எல்.ஆர்., அல்லது அது சார்ந்த ஆவணத்தை பயன்படுத்தலாம்.பதிவேற்றம் செய்தவுடனேயே, சேவை கோரிக்கை ரசீது வந்துவிடுகிறது; எங்கும் செல்லவேண்டியதில்லை. ஆவணங்களை, 75 அல்லது 150 டி.பி.ஐ.,(புகைப்பட தரம்) அளவில் ஸ்கேன் செய்தாலே போதுமானது. மற்ற சேவைகளுக்கும் இதையே பின்பற்றலாம்.இதைப்போலவே சொத்து வரிக்கும் எளிமையாக விண்ணப்பிக்கலாம். இதற்கு காலியிட வரி எண் மற்றும் கட்டட அனுமதி விபரங்களை அளித்தாலே போதுமானது. தள பரப்பு, தள பயன்பாடு ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.வரியை கணக்கிட வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த தேவை புதிய குடிநீர் இணப்பு. இதற்கு படிவம் 'ஏ' பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த படிவம் இணையதளத்தில் இருந்து https://tnurbanepay.tn.gov.in/WaterSupply.pdf பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இதில், குடிநீர் தேவை குடியிருப்புக்கா அல்லது வணிக இடத்திற்கா என குறிப்பிட்டு சொத்துவரி செலுத்திய விபரத்துடன் அளிக்கப்பட வேண்டும். படிவம் 'ஏ' மற்றும் சொத்து வரி ரசீது நகல் ஆகியவை மட்டும் பதிவேற்றம் செய்தாலே போதுமானது.விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன், சேவை கோரிக்கை ரசீது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் அதிகாரி கள ஆய்வுக்கு பின், கட்டணம் செலுத்த கேட்பு அறிக்கை இணையதளம் வாயிலாக பெற்று, இணையதளத்திலேயே கட்டணம் செலுத்தி விடலாம்.இவ்வாறான எளிமையான விண்ணப்பிக்கும் வசதிகள், அரசு இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன. தேவையானவர்கள் பயன்படுத்தி சேவை கோரும் பட்சத்தில், மாநகராட்சி தகுந்த நடவடிக்கையை, உடனுக்குடன் எடுத்து உதவினால் பயனாளிகளிடம் வரவேற்பு இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி