ADDED : டிச 18, 2022 | ADDED : டிச 18, 2022
மாண்புமிகு மாணவி 'மூணும் பொம்பளை பிள்ளையாப் போச்சு; எனக்கப்புறம் இந்த கலையை யாரு கவ னிப்பா'ன்னு அப்பா வுக்கு இருந்த பெரும் கவலை என் னால இப்போ இல்லை!'சின்னவயசுல அப்பாவோட மரப்பட்டறைதான் எனக்கு மைதானம்; மரச்சாமான்கள்தான் விளையாட்டுப் பொருட்கள்! இந்த ஆர்வத்தால, 10 வயசுலேயே மரத்தை செதுக்க துவங்கிட்டேன். இப்போ ஜன்னல், வாசல் கதவுகளுக்கான சித்திரங்களை நுணுக்கமா என்னால இழைக்க முடியும்!
யார் இவர்?
பெயர்: அஞ்சனாஸ்ரீவகுப்பு: 9ம் வகுப்புபள்ளி: திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.பெற்றோர்: முத்துக்குமார் - கவிதாஅடையாளம்: மரச்சிற்ப கலைஞர்
'இது ஆண்களுக்கான களம்'னு சொல்றாங்களே...
வேலையில என் நேர்த்தியைப் பார்க்குற வரைக்கும் என்கிட்டேயும் அப்படித்தான் சொன்னாங்க; அப்புறம், 'இந்த சின்னவயசுல இப்படி ஒரு திறமையா?'ன்னு என்னைப் பாராட்டினாங்க!
'காலம்' - உங்க புரிதல் என்ன?
'நாளைக்கு பார்த்துக்கலாம்னு வேலைகளை தள்ளிப் போடுறப்போ காலம் நம்மைப் பார்த்து சிரிக்கும்'னு மனப்பூர்வமா நம்புறேன்.
எங்கள் அஞ்சனாஸ்ரீ
'செல்போனும் கையுமா திரியுற பிள்ளைகள் மத்தியில சிலம்பம், பரதம், தற்காப்புக்கலையை அஞ்சனா நேசிக்கிறா; மரச்சிற்ப கலை அவளுக்கு உயிர்!'- சு.விஜயபானு, தமிழாசிரியை.