உள்ளூர் செய்திகள்

திருமதி விவசாயி!

விவசாயம் செய்யும் இல்லத்தரசிகளை அங்கீகரிக்கும் விதமாக தன் 'யு டியூப்' சேனலுக்கு 'உழவி ஆர்கானிக்' என்று பெயர் சூட்டியுள்ளார் விழுப்புரம் அனுராதா.கணவர்: நடராஜன்படிப்பு: பி.காம்.,பிள்ளைகள்: ஒரு மகன்வயது: 38என் உலகம்எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர்ல, 20 சென்ட் நிலத்துல 15 வகையான பழ மரங்கள், காய்கறி செடிகள், கீரைகளை உள்ளடக்கி ஒரு உணவுக்காடு உருவாக்கி இருக்கேன். எங்க குடும்ப தேவைக்குப் போக விற்பனைக்கும் இது உதவுது! இதோட, கோழி வளர்ப்பும் உண்டு. நிலத்தடி நீரை தக்க வைச்சுக்க உதவுற 'மீன் குட்டை' மீன்கள் விற்பனையும் வருமானம் தருது! இயற்கை விவசாயம் செய்ற பலரும் கால்நடை வளர்ப்புல தப்பு பண்றாங்க; பசு மாடுகளுக்கு சினை ஊசி போடுறாங்க; இது குற்றம்னு நினைக்கிறதால இந்த பாவத்தை என் பசுக்களுக்கு நான் செய்றதில்லை!அனுராதாவின் காய்கறி விற்பனைக்கு சென்னையிலும் வாடிக்கையாளர்கள் உண்டு! தன்னுடைய முயற்சியில் அருகாமை விவசாயிகளையும் இணைத்திருக்கும் இவரது கனவு... 'நஞ்சில்லா காய்கறிகள்' சந்தை.விக்கிரவாண்டி - செஞ்சி சாலையில் 12 கி.மீ., தொலைவில் இருக்கிறது இவரது புதுப்பாளையம் கிராமம்.70106 21983


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !