புற்றுநோயால் தோள்பட்டை எலும்பில் முறிவு
ராதிகா, சேலம்: நான், 64 வயது பெண். இரு வாரங்களாக தோள்பட்டையில் வலி உள்ளது. 6 மாதங்களுக்கு முன், புற்றுநோயால் கர்ப்பப்பை அகற்றப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையும் பெற்றேன். இப்போது தோள்பட்டை ஹியூமெரஸ் எலும்பில் புற்றுநோய் பரவி, முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை உண்டா?ஹியூமெரஸ் எலும்பில் புற்றுநோய் பரவி இருக்கிறது என்றால், அது ஸ்டேஜ் 4 என்று கருத வேண்டும். முறிந்த ஹியூமெரஸ் எலும்பில் உள்ள வலியை போக்க, அதில் ஒரு, 'ராடு' போட வேண்டும். வலி குறையும். உங்கள் புற்றுநோயின் வீரியத்தை கட்டுப்படுத்த, மேலும் சிகிச்சைகள் எடுக்க வேண்டும். நீங்கள் எலும்பு மூட்டு மருத்துவம் மற்றும் புற்றுநோய் நிபுணரை சந்தித்து, உங்கள் பிரச்னையைக் கூறி, சிகிச்சை மேற்கொள்ளவும்.