தொப்பைக்கு விடை தரும் இஞ்சி சாறு!
கொடி போல இடை தளிர்போல நடை என்று, பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். உடம்பை சிக்குன்னு, சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே அவர்கள் நாசுக்காக அவ்வாறு சொல்கின்றனர். தினமும் இஞ்சி சாறு குடித்தால், கொடி போன்ற இடையை பெறலாம்.எப்படி செய்வது?சிறிது துண்டு இஞ்சியை எடுத்து, அதன் தோல் பகுதியை முதலில் அகற்றவும். இஞ்சித்துண்டை நன்றாக நசுக்கிய பிறகு, முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் இஞ்சியை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கியதும் வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளவும். தொடர்ந்து காய்ச்சிய பாலை எடுத்து, அத்துடன் வடிகட்டிய சாரத்தை கலக்கவும். அத்துடன் தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது இனிப்பு சுவைக்காக, சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்கொண்டால் போதும், இஞ்சிப்பால் தயார்! இந்த இஞ்சிப் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும். தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். உடல் எடையை படிப்படியாக குறைத்துவிடும். ரத்தக் குழாய்களில் அடைப்பு என்றாலும் நீக்கி விடும். எனவே மாரடைப்பை தடுக்கும் சக்தியும் இஞ்சி சாறுக்கு உண்டு. பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய் கட்டிகளை நீக்கி விடும். மூன்று வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இதனை தினமும் சாப்பிட்டால் உடம்பு சுறுசுறுப்பாகும். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.