மூட்டு வலியும், சர்க்கரை நோயும்!
கிருத்திகா, கோடியக்கரை: என் வயது, 58. வலது முழங்கால் தேய்மானத்திற்காக 'குளுகோஸாமின்' மருந்தை, ஆறுமாதங்களாக எடுத்து வருகிறேன். மூட்டுவலியில் சிறிதளவே மாற்றம் உள்ளது. இம்மருந்தால், சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதா?குளுக்கோஸாமின், மூட்டினில் உள்ள ஜவ்விற்கு ஆகாரம் போன்று ஒரு மருந்து. இந்த மருந்தால், சர்க்கரை நோய்வருவது மிகவும் அரிது. எனவே, பயப்பட வேண்டாம்.