உள்ளூர் செய்திகள்

முருங்கைப்பூ

முருங்கை, நம் நாட்டில் அதிகம் பயிர் செய்யப்படும் மரம். இதன் மருத்துவப் பயன்கள் ஏராளம். அவற்றில் பலரும் அறிந்தது, முருங்கைக்காய்களும், கீரையும் மட்டுமே. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கீரைகளில் முதன்மையானது முருங்கைக்கீரை. இதேபோன்ற பயன்களை, முருங்கைப்பூவிலும் பெற முடியும்.ஆனால், வீட்டில், தோட்டத்தில் முருங்கை மரம் வைத்திருப்பவர்கள் கூட, முருங்கைப்பூவை உண்பதில்லை; உண்டதில்லை என்றே சொல்லும் நிலை இருக்கிறது. காரணம், அவர்களில் பலருக்கும், முருங்கைப்பூவின் பயன்கள் தெரிவதில்லை. ஆண்மை அதிகரிக்கும் தாது, முருங்கைப்பூவில் அதிகம் இருக்கிறது. நன்கு காய்ச்சிய பசுவின் பாலில், முருங்கைப்பூக்களை போட்டு தினமும் குடித்து வந்தால், தாது பலம் பெறும்.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் குடித்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயாகரா என்றும் கூறுவர். முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். உடல் சூட்டை தணிக்கவும் முருங்கைப்பூ பயன்படுகிறது. இதை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், சூடு தணியும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும் முருங்கைப்பூ பயன்படுகிறது. முருங்கைப்பூ சாறு, மேகநோயை தணிக்க உதவுகிறது. இதை, துவையல் செய்தும் சாப்பிடலாம்.மறதியை போக்கவும், நினைவாற்றல் பெருகவும் பயனுள்ள மருந்தாக முருங்கைப்பூ உள்ளது. தேர்வு நெருங்கி வரும் வேளையில், குழந்தைகளுக்கு முருங்கைப்பூ பொரியல் செய்து கொடுப்பது நல்லது. முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கல்கண்டு கலந்து, தினமும் காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால், நினைவாற்றல் பெருகும்.நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றி வருபவர்கள், அலுவலக ஊழியர்கள் பலருக்கு, 40 வயதிற்கு மேலாகி விட்டால், கண்ணாடி அணியாமல் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும். பேப்பர் படிக்கக்கூட அவர்களால் முடியாது. இதை, வெள்ளெழுத்து பிரச்னை என்று கூறுவர். இவர்களுக்கு முருங்கைப் பூ, நல்ல பயன் தரும். இந்த பூவை, நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, தினமும் காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, பார்வைக் கோளாறுகள் நீங்கும். அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். அவர்கள், முருங்கைப் பூவை கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்