பாக்கெட் உணவில் பாதுகாப்பு இல்லை
இயற்கையான உணவு பழக்கத்தில் இருந்துமாறி, இன்று பலர் பரபரப்பு வாழ்க்கை சூழலில், முறையற்ற உணவு பழக்கத்துக்கு மாறி விட்டனர். உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், காய்கள், பழங்கள் என, அனைத்தும் பதப்படுத்தப்பட்ட, செரிவூட்டப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்திகின்றனர். வெண்ணெய், நெய், வனஸ்பதி மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். இதனால், கொலஸ்ட்ரால் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் நல்லது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்களுக்கு பதிலாக, எந்த கலப்பும், செரிவூட்டலும் இல்லாத, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்பு அதிகரிக்கும். ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். புழுங்கல் அரிசி சாதம் மிக நல்லது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான், 100 சதவீத சத்துக்கள் உள்ளன. உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, காய்கறிகள், பழங்கள் உடலுக்கு ஆபத்தை தரும். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்களே ஆரோக்கியமானது. கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பால் நல்லது. மூலிகை டீ அருந்தலாம். சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீயில் கருப்பட்டி, வெல்லம் போட்டு சாப்பிட்டால் நல்லது. வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதால், செயற்கையான உற்பத்தி பொருட்களை அவர்கள் சாப்பிடுவதில்லை. அம்மாதிரியான உணவு பொருட்களை, ஏற்றுமதி செய்ய பல நாடுகள் தடை விதித்து இருக்கின்றன.