உள்ளூர் செய்திகள்

கோபம் ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள்

கோபம் பலவித நோய்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது உங்களுக்கு தெரியுமா?மன அழுத்தம்: அதிகமாக கோபம் வருவதால், மன அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக நீரிழிவு, மன இறுக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் வரும். இதய நோய்: கோபம் வரும்போது வரும் படபடப்பு தன்மை, இதய துடிப்பை அதிகப்படுத்தி இதயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆபத்தான விளைவுகளில் முடியும். தூக்கமின்மை: கோபம் வரும் போது, ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் சரியான தூக்கமின்மை, ஓய்வில்லாமையால் நோய் எளிதாக தாக்கும். ரத்த அழுத்தம்: கோபம் வரும் போது உடலில் ரத்த அழுத்தம் உடனடியாக, அதிகப்படியான அளவுக்கு அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயம் கடுமையாக பாதிக்கப்படும். சுவாசக்கோளாறு: ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆஸ்துமா உள்ளவர்கள் அதிகம் கோபப்பட கூடாது. இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். மாரடைப்பு: பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத்தான் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையோ, கோபமூட்டும் விஷயத்தையோ கூற வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு, மூளையில் உள்ள ரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான ரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதால், அவை ரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். ஆகவே அதிக கோபம் ஆபத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்