உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / கேப்டன் தமிழ்ச்செல்வன்

கேப்டன் தமிழ்ச்செல்வன்

கடந்த 2008 ஆம் மும்பையை உலுக்கிய தீவிரவாத சம்பவத்தை யாராலும் மறக்கமுடியாது.மும்பையை மட்டுமல்ல உலகையே உலுக்கிய இந்த சமபவத்தின் பின்னனியின் இருந்த தீவிரவாதி அஜ்மல்கான் சத்ரபதி ரயில் நிலையத்தில் தனது எந்திர துப்பாக்கியால்பலரையும் சுட்டு வீழ்த்தியபடி சென்றான்.அப்படிச் சுட்டுக் கொன்றே சென்றவன் திரும்பி வந்து சுடுவானா? இவனுக்கு பின்னால் இன்னும் யாரேனும் தீவிரவாதி சுட்டுக்கொண்டே வருவானா? என்பது தெரியாத நிலை.இதன் காரணமாக குண்படிபட்டவர்கள் உயிருக்கு போராடியும் யாரும் காப்பாற்ற முன்வராத சூழ்நிலை.அப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு இருந்த ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 'லக்கேஜ்' கொண்டு செல்லப்பயன்படும் தள்ளுவண்டியில் அடிபட்டவர்களைமீட்டு எடுததுக் கொண்டு போய் மருத்தவமனையில் சேர்த்தார்.அப்படி அவர் கொண்டு போய்ச் சேர்த்ததன் மூலம் உயிர்பிழைத்தவர்கள் மட்டும் 36 பேர்தன் உயிரைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டு 36 பேரின் உயிரைக்காப்பாற்றியவர் யார்? என்று அனைவரும் அறிய முற்பட்டனர்.அவர்தான் தமிழ்ச்செல்வன் ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பக்கம் உள்ள கிராமத்தில் பிறந்தவர்,11 ஆம் வகுப்பு வரை படித்தவர்.குடும்ப ஏழ்மையை போக்க துபாய் போய் வேலை பார்க்க முனைந்தார் ஒரு தரகரிடம் பணம் கொடுத்தார்.அந்த தரகர் தமிழ்ச்செல்வனை மும்பை விமான நிலையம் வரை அழைத்துச் சென்று அங்கேயே 'அம்போ' என்று விட்டுவிட்டு சென்றுவிட்டார்.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தமிழ்ச்செல்வன், ஊரில் கடன் வாங்கி தன்னை அனுப்பிய பெற்றோர் நடந்ததை அறிந்தால் வேதனைப்படுவார்கள் என்பதால், எந்த இடத்தில்ஏமாந்தமோ அந்த இடத்திலேயே வாழ்ந்து காட்டவேண்டும் என்று முடிவு செய்தார்.ரயில்வேயில் கூலி தொழிலாளியாக பணியாற்றினார், அங்கு படிப்படியாக முன்னேறி பார்சல் சர்வீஸ் காண்ட்ராக்டராக மாறினார்.அப்ப்டியான சூழ்நிலையில்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட அப்பாவி உயிர்களின் காப்பாற்றினார்.இந்த சம்பவத்திற்காக மாநில கவர்னர் தமிழ்ச் செல்வனை நேரில் அழைத்துப் பாராட்டி கேப்டன் பட்டம் கொடுத்து கவுரவித்தார்.சாதாரண தமிழ்ச் செல்வன் கேப்டன் தமிழ்ச்செல்வனானார்,இனி தன் உழைப்பு மக்களுக்கே என்று முடிவு செய்தார்.எல்லா தரப்பு மக்களுக்கும் இவர் செய்த உதவி காரணமாக மாநகராட்சி கவுன்சிலரானார்.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக..வேட்பாளராக, அதிகம் தமிழர்கள் வசிக்கும் பகுதியான தாராவியை உள்ளடககிய கோலி,சியான்வாடா தொகுதியில்களம் இறக்கப்பட்டார்,நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தனக்கு என உதவியாளர் கூட வைத்துக் கொள்ளாமல் தன்னைத் தேடி வரும் மக்களுக்கு உடனுககுடன் உதவிகள் செய்து, கட்சியிலும் ஆட்சியிலும் மக்களிடமும் செல்வாக்கைப்பெறறார்.அடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அமோகமாக வெற்றி பெற்றார்,இப்போது 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 'ஹாட்ரிக்'வெற்றியைப் பெற்றுள்ளார்,இந்த முறை இவரை வெற்றி பெறவைக்கக்கூடாது என்பதற்காக, இண்டியா கூட்டணி சார்பாக இவரை எதிர்த்து கணேஷ்குமார் என்ற தமிழரையே காங்.வேட்பாளராகபோட்டியிட வைத்தனர், இருந்தும் இன்டியா கூட்டணி முயற்சி தோற்றது.இது குறித்து தமிழ்ச்செல்வன் கூறுகையில், இந்த தொகுதியில் நிறைய தமிழர்கள் இருப்பதால்தான் நான் ஜெயிப்பதாக கூறுகின்றனர், உண்மையில் இங்கே தமிழர்கள் மூன்றாவதுஇடத்தில்தான் இருக்கின்றனர், என்னை யாரும் தமிழன் என்று பார்ப்பது இல்லை, இங்குள்ள மராட்டியர்கள் உள்பட அனைவருமே அவர்களில் ஒருவராகத்தான் பாரக்கின்றனர்,நானும் எம்எல்ஏ..வுககு உள்ள கடமையை சரிவரச் செய்துவருகிறேன்.,மும்பையில் வசித்தாலும் தமிழ் மண்ணையும் மக்களையும் மறக்கவில்லை சொந்த கிராமத்தில் இருக்கும் அம்மா உள்ளீட்ட சொந்தங்களை அவ்வப்போதுவந்து பார்த்துச் செல்வார் மும்பையில் மற்ற தொகுதிகளில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளையும் நிறைவேறற பாடுபடுவார்,ஒட்டுமொத்த மாராட்டிய மண்ணில் உள்ள தமிழர்களின் நலனுக்காக 'தமிழ்பவன்' என்ற கட்டிடத்தை கட்டுவதற்கான முயற்சியில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.இவர்செய்வது அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த இருப்பதால் அரசும் மக்களும் எப்போதும் இவர் பக்கமே.தமிழர்களின் பெருமையை உயர்த்தும் கேப்டன் தமிழ்ச்செல்வன் மென்மேலும் புகழ்பெறட்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Saravanakumar c
டிச 02, 2024 11:12

வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்


Bahurudeen Ali Ahamed
டிச 01, 2024 15:59

பாராட்டுக்கள் திரு தமிழ்ச்செல்வன் அவர்களே


Dharmavaan
டிச 01, 2024 07:42

இது நன்றி கெட்ட உலகம். தமிழ் நாடு அதில் முதல் காமராஜரை தோற்கடித்த துரோகிகள். உஷாராக இருக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
நவ 30, 2024 21:11

வாழ்த்துக்கள்


xyzabc
நவ 30, 2024 00:58

Hopefully captain ji becomes a minister in the state cabinet. He deserves it.


sankar
நவ 29, 2024 21:30

பாராட்டுக்கள் தம்பி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை