உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / சேவையே உயிர் மூச்சாக..

சேவையே உயிர் மூச்சாக..

அது ஒரு விழாவிழா தொடர்பான எளிய விருந்தில் அமர்ந்து அவர் சாப்பிட ஆரம்பிக்கிறார்அப்போது அவரது உதவியாளர் பதட்டத்துடன் ஓடி வருகிறார்அம்மா..அந்த பெண்ணுக்கு கடுமையான பிரசவ வலி. துடித்துக் கொண்டு இருக்கிறார்.. என்கிறது உதவியாளர் குரல்..சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உடனே எழுந்து ஓட்டமும் நடையுமாக பிரசவ அறை நோக்கி செல்கிறார்அவர் பிரசவ அறைக்குள் நுழைந்ததுமே வெளியே இருந்த உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் இனி எல்லாம் சுபமாகவே நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.அதே போல அடுத்த சில நிமிடங்களில் ஆரோக்கியமான பெண் குழந்தையுடன் வெளியே வந்து தாயும் சேயும் நலம் என்று புன்னகையுடன் சொல்கிறார்.அவரது புன்னகை அனைவருக்குமான சந்தோஷமாக அந்த இடத்தில் பரவுகிறதுஅவருக்கு அது எத்தனையாவது பிரசவம் என்று கணக்கு வைத்துக் கொள்ளவில்லை ஆனால் பல ஆயிரத்தை தாண்டியிருக்கும் என்கின்றனர் சுற்றியிருப்பவர்கள்யார் அவர்?டாக்டர் கவுசல்யா தேவி1930 ஆம் வருடம் சாத்துார் அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தில் பிறந்தவர்,அப்பா ரகுபதி கால்நடை மருத்துவர்.சிறுவயது முதலே சேவை செய்யவேண்டும் என்று தனது மகள் கவுசல்யாவை சொல்லி சொல்லி வளர்த்தவர்.அதன்படியே படித்து டாக்டர் கவுசல்யா தேவியானார்.சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959-ல் தேர்ச்சி. 1960லிருந்து 69 வரை சங்கரன்கோவில், கோபிசெட்டிப் பாளையம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்.நாகப்பட்டினத்தின் பணியாற்றும் போதுதான் கீழ்வெண்மணி சம்பவம் நடந்தது,உயிருக்கு ஆபத்தான முறையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பல உயிர்களை காப்பாற்றினார் இதற்காக தொடர்ந்து 52 மணி நேரம் மருத்துவமனையிலேயே இருந்து பணிபுரிந்தார்.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராமத்தில் இயங்கிவரும் கஸ்துாரிபாய் மருத்துவ மனைக்கு சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர் தேவை என்பதை அறிந்து நிறுவனர் சவுந்திரம் அம்மாளைச் சந்தித்தார்.அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையை மேலும் புனிதப்படுத்தியது.இனி தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவே செலவிடுவது என்று முடிவு செய்தார்.தனது இந்த சேவைப்பயணத்தில் திருமணம் எங்கே தடையாக இருந்துவிடுமோ எனக்கருதி திருமணம் செய்து கொள்வதை தவிர்த்துவிட்டார்.கேட்டால் உயிர் காக்கும் மருத்துவத்தை விட உயர்ந்தது வேறென்ன? நான் அதையே மணம் புரிந்து கொண்டேன் என்பார் மானசீகமாக.1969 முதல் கஸ்துாரிபாய் மருத்துவ மனையில் சேவை செய்துவந்தார்,இவருக்கு அறுபது வயதானதும் தனது சேவையை எப்போதும் போல தொடர்வதாகவும் இனி சம்பளம் என்று எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.பிரசவம் பார்ப்பதில் மிகவும் கெட்டிக்காரர் என்பதால் இந்த சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டுமின்றி பல பகுதிகளில் இருந்தும் இவரிடம் பிரசவம் பார்த்துக்கொள்ள வருவர்.இந்தப் பகுதியில் விபத்து மற்றும் நீரிழிவு காரணமாக கால்களை இழந்த பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, முதல் செயற்கைக் கால்களை கண்டுபிடித்த டாக்டர் சேத்தியின் ராஜஸ்தான் மருத்துவமனைக்கு சென்று, அவரிடம் செயற்கை கால்கள் பொருத்தும் நுட்பத்தை கற்றுக் கொண்டு, அதை காந்தி கிராம மருத்துவமனையில் அமலாக்கியவர் அந்த வகையில் 4,233 பேர் பயன்பெறக் காரணமாக இருந்துள்ளார்.நாகப்பட்டினம் தீவிபத்தில் பல தாய்மார்கள் தங்கள் ஒற்றைக்குழந்தையை இழந்து தவித்தபோது அவர்களுக்கு கர்ப்பப்பை குழாய் இணைப்பு சிகிச்சை மூலம் மீண்டும் கருவுறச் செய்து குழந்தை பாக்கியம் பெறக்காரணமாக இருந்தார்.இப்படிப் பல சாதனைகள் செய்த இவருக்கு பத்மஸ்ரீ உள்ளிட்ட பல பட்டங்கள் தேடி வந்தபோதும் தனிப்பட்ட முறையில் நான் பாராட்டப்படுவதை விரும்பவில்லை எனது கஸ்துாரிபாய் மருத்துவமனைக்கு விருது கொடுப்பதையே மதிக்கிறேன், ஏற்கிறேன் என்றவர்.காந்திகிராம கஸ்துாரிபாய் மருத்துவமனையின் ஆலோசகராக, 'எங்கள் அம்மா' என்றும், தமிழகத்தின் தெரசா என்றும் மக்களால் போற்றப்பட்ட, சேவை செய்வதையே இவர் உயிர்மூச்சாக் கொண்டு 95 வயது வரை வாழ்ந்த டாக்டர் கவுசல்யா தேவிதயின் மூச்சு கடந்த 24 ஆம் தேதி அடங்கிவிட்டது.ஏழை எளியவர்களுக்கான தொண்டே தெய்வ வழிபாடாகக் கொண்டு ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்து மறைந்திட்ட அந்த அன்பு உள்ளத்தின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

saiprakash
மே 24, 2025 13:15

அவருடைய சேவை அளப்பரியது ,அது என்றென்றும் கொண்டாடப்படும் ,இதை படித்து கொண்டு வரும்பொழுது அவர் மறைந்து விட்டார் என்றபொழுது உண்மையாலுமே என் மனம் கலங்கி விட்டது ,உண்மையாலுமே அவரது இழப்பு தாங்கமுடியாதது மனது வலிக்கிறது


N Annamalai
மே 05, 2025 08:28

ஆழ்ந்த இரங்கல்கள் .இவர் புகழ் என்றும் மறையாது


GUNA SEKARAN
மே 02, 2025 04:35

ராமபிரானின் தாய் கோசலை தான் கௌசல்யா என்பதும். மிகப் பொருத்தமான பெயர். நல்ல ஆத்மா அமைதி பெறும்


KRISHNAN R
ஏப் 30, 2025 14:15

வார்த்தைகள் இல்லை... கோடி வணக்கங்கள்.


Arasu
ஏப் 29, 2025 16:09

அவரது ஆண்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்


Krishna Renga
ஏப் 29, 2025 04:08

May her souls rest in peace..


ravi subramanian
ஏப் 28, 2025 12:50

Great salute.