உள்ளூர் செய்திகள்

நகருக்கு நடுவே செங்குத்தாக ஒரு காடு

பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில், ஒரு ஹெக்டேர் பரப்பளவில், அடுக்குமாடிக் கட்டடத்தில் செங்குத்துக் காடு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அடுக்கு மாடிக் கட்டடங்களில் மரங்களையும், செடி கொடிகளையும் வளர்ப்பதன் மூலம், நகருக்குள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. செங்குத்துக் காடுகள் என்றழைக்கப்படும், இந்த வகையான அடுக்கு மாடிகளை வடிவமைப்பதில் இத்தாலிய கட்டடக்கலை நிபுணர் ஸ்டெஃபனோ போரி (Stefano Boeri) வல்லுனர். ஏற்கெனவே சீனாவின் நான்ஜிங் (Nanjing) உள்ளிட்ட இடங்களில் அடுக்கு மாடிக் காடுகளை அமைத்து சாதனை புரிந்துள்ளார். தற்போது, பாரீஸ் நகரின் வில்லியர்ஸ் சர் மரேன் (Villiers sur Marne) பகுதியில் 54 மீட்டர் உயரமுள்ள அடுக்குமாடி ஒன்றை நிறுவியுள்ளார். இக்கட்டடத்தின் பால்கனிகளிலும், மொட்டை மாடிகளிலும் 2,000 மரங்கள், புதர் செடிகள், செடிகள் நடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !