அரசர்களின் சாப்பாடு!
அரசர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள அனைவருக்கும் ஆசை இருக்கும். சாப்பிட்ட உணவு வகைகள் போலவே, அவர்கள் சாப்பிடும் முறையும் முக்கியமானது. அந்தக் கால அரசர்கள், தங்கத் தட்டில் சாப்பிட்டுள்ளனர். தட்டின் இடதுபுறம், பானங்கள், ரொட்டி வகைகள் பரிமாறி, நடுவே சோறு பரிமாறப்பட்டுள்ளது. சோற்றுக்கு அடுத்து, காய்கறிகள், கீரைகள் வைக்கப்பட்டுள்ளன. அனுதினமும் அறுசுவை உணவு வகைகளை அரசர்கள் உண்டு மகிழ்ந்துள்ளனர். முதலில் இனிப்புகளை உண்பார்கள். பின்னர், புளிப்பு, உப்பு சுவையுள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்வர். அதற்கடுத்து, கசப்பும், காரமும் சேர்ப்பர். கடைசியாக செரிமானத்திற்கு துவர்ப்பு சுவை நிறைந்த பழங்களை உண்டார்கள். எ.டு: வாழைப்பழம், மாதுளை.விடலபாகா என்றால் என்ன?அடுத்தவாரம் பார்ப்போம்.