சிறுநீர் சோதனையில் புற்றுநோயைக் கண்டறியலாம்
உலகம் முழுவதும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்தான ஆய்வுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தவண்ணம் உள்ளன. தற்போது சிறுநீர் பரிசோதனையின் மூலமே ஒருவரின் புற்று நோயைக் கண்டறியும் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள். நானோ வயர் (Nanowire) தொழில்நுட்பத்தில் இயங்குமிது, புற்றுநோயின் செல்களை எளிதில் கண்டறியும் தன்மை கொண்டது. இதன் மூலம் புற்றுநோய் செல்களின் ஆரம்ப வளர்ச்சியிலேயே கண்டறியமுடியும் என்றும், புற்றுநோய் மட்டுமல்லாது இந்த தொழில்நுட்பத்தைக்கொண்டு மனிதர்களுக்கு வரும் ஏனைய நோய்களையும் அடையாளம் காணும் நோக்கிலேயே ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜப்பானின் நேகோயா பல்கலைக்கழகத்தின் உயிரிவேதியியல் பொறியியல்(biomolecular engineering) துறையின் உதவிப் பேராசிரியர் டாகோவ் யாசுயி தெரிவித்துள்ளார்.