ஆதார் அவசியம் அமைச்சரவை ஒப்புதல்!
முன்னர், வங்கிகளில் கணக்கு தொடங்கவும், மொபைல் சிம் கார்டுகள் வாங்கவும் ஆதார் அட்டை அவசியமாக இருந்தது. தற்போது, ஆதார் எண்ணை சுய விருப்பத்தின் பேரில் பயன்படுத்த வழிவகுக்கும் அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்தியாவில் ஆதார் அட்டை பயன்பாட்டிற்கு வந்தது முதல் அடையாளச் சான்றாகப் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் நிலவின. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ஆதாரைக் கட்டாயமாக்கக்கூடாது என்று கூறியது. இந்நிலையில், சுய விருப்பத்தின் பேரில் ஆதாரை அடையாளச் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.