.பருவமழை 20ம் தேதி தொடங்க வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை 20ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை காலத்தில் தமிழகம் பெறும் இயல்பான மழை அளவு 44 செ.மீ ஆகும். இந்த ஆண்டு, 92 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த பருவமழை முடிவில், மத்திய இந்தியாவில் உயர் அழுத்த காற்று சுழற்சி உருவாகி, வங்க கடல் பகுதியில் திரளான மேகக்கூட்டங்களுடன் வந்து மழையைப் பெய்யும். அதுவே வடகிழக்கு பருவமழை தொடக்கம் ஆகும்.