ஒரு கூட்டுக் கிளியாக...
கிருஷ்ணகிரி மாவட்டம் உல்லட்டியை அடுத்த கிராமம் எட்டிப்பள்ளி. இங்கு, குண்டேகவுடு (வயது 65) குடும்பத்தினர், நான்கு தலைமுறைகளாக ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். மொத்தம் 60 பேர் உள்ள இக்குடும்பத்தில் மட்டும், 40 வாக்காளர்கள் உண்டு. “தேர்தலும் எங்கள் வீட்டில் விசேஷமாகிவிட்டது'' என்கிறது குண்டேகவுடு குடும்பம்.