உள்ளூர் செய்திகள்

விவசாயத்தில் ட்ரோன்!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள பிரடுதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, நுன்னா லெனின். அங்கு வேளாண் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும், அவர்களின் கூலி பல மடங்கு உயர்ந்ததாலும் மாற்று வழி தேடினார். ட்ரோன்களைப் பயன்படுத்தி வயல்களில் பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும் முயற்சியைத் தொடங்கினார். ஒரு நாளுக்கு வாடகையாக 500 ரூபாய் செலவில், ஓர் ஏக்கர் நிலத்தில் மருந்து தெளித்துவிட முடிகிறது என்பதால் நுன்னாவின் இம்முயற்சியை விவசாயிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !