வேர்க்கடலைக்கு ஐ.எஸ்.ஐ. சான்று
உற்பத்திப் பொருட்களின் தரத்தை அங்கீகரிக்கும் வகையில், இந்திய தர நிர்ணய ஆணையம், ஐ.எஸ்.ஐ. சான்று வழங்கிவருகிறது. இதற்கு, பல விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சென்னையில் உள்ள தென்மண்டல அலுவலகம் சார்பில் இந்தியாவில் முதல் முறையாக வறுத்த வேர்க்கடலைக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று தரப்பட்டுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த, 'சுவர்ணபூமி என்டர்பிரைசஸ்' நிறுவனம் இதைப் பெற்றுள்ளது. விதிமுறைகளின்படி சுத்தம், தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து இந்தச் சான்று வழங்கப்பட்டுள்ளது.