நான்கில் ஒன்று சொல்
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.1. இந்தியாவில் உள்ள எந்த யூனியன் பிரதேசத்தில், புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்குவதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு, அதன் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்?அ. புதுடில்லிஆ. சண்டிகர்இ. லடாக்ஈ. புதுச்சேரி2. உலகின் மிக நீளமான கடல் நடைபாலம், ஐரோப்பிய நாடான எங்கு, ஹெல்சின்கியின்தீவுகளையும், நகர மைய பகுதியையும் இணைக்கும் வகையில், 1.2 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது?அ. ஜெர்மனிஆ. பின்லாந்துஇ. பிரான்ஸ்ஈ. இத்தாலி3. 2025ஆம் ஆண்டில், உலக அளவில் ராணுவத்திற்காக அதிக நிதி செலவிட்ட நாடுகளில், 8.71 லட்சம் கோடி ரூபாயுடன் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில், 88 லட்சம் கோடி ரூபாயுடன், எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?அ. அமெரிக்காஆ. ரஷ்யாஇ. சீனாஈ. ஜப்பான்4. சீனாவில் நடந்த ஆசிய பீச் விளையாட்டு 6வது சீசனில், பெண்களுக்கான கபடி போட்டியில் எந்த அணியை வீழ்த்தி, இந்தியா தங்கம் வென்றது?அ. இலங்கைஆ. பாகிஸ்தான்இ. ஆஸ்திரேலியாஈ. சீனாவிடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ 4. அ.