உள்ளூர் செய்திகள்

தங்க மீனின் கர்வம்!

செந்தமிழ் கொடுமலையாளம்தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒற்றுமை உண்டு. 'செந்தமிழ் கொடுமலையாளம்' என்று ஒரு பழமொழியே சொல்வார்கள். இங்கே ஒரு மலையாளக் கதை தமிழ் எழுத்துகளில் தரப்பட்டுள்ளது. அதைப் படித்தாலே கதை புரிந்துவிடும், பாருங்கள். சில சொற்கள் சிரமம் ஏற்படுத்தினால், பக்கத்தில் உள்ள தமிழ் வடிவத்தைப் படித்துக் கொள்ளுங்கள். மலையாளம்ஒரு குளத்தில் ஒரு ஸ்வர்ண மீன் உண்டாயிருந்நு. வலிய அஹங்காரியாய் இருந்நு அவன்.“ஐயையே! நிங்ஙளெயொக்கெ காணான் ஒரு பங்கியுமில்ல. என்னால், என்னெ நோக்கூ, எந்து பங்கியாணெனிக்கு!” ஸ்வர்ண மீன் எப்போழும் மற்று மீன்களெ களியாக்கும்.அங்ஙனெ இரிக்கெ ஒரு காக்கச் சேட்டன் அது வழி வந்நு. குளத்தில் எந்தோ ஸ்வர்ண நிறத்தில் வெட்டித் திளங்ஙுன்னது காக்க சேட்டண்டெ கண்ணில் பெட்டு. “ஹய்யோடா, அதொரு ஸ்வர்ண மீனாணல்லோ!” காக்கச் சேட்டண்டெ வாயில் கப்பலோடிக்காதுள்ள வெள்ளம் நிறஞ்ஞு. காக்கச் சேட்டன் வேகம் ஸ்வர்ண மீனினெ ஒற்றக் கொத்து! பாக்யத்தினு ஸ்வர்ண மீனிண்டெ ஒரு குஞ்ஞி ச்சிறகினு மாத்ரமே கொத்துகொண்டுள்ளு.ஏதாயாலும் ஸ்வர்ண மீனினு நன்னாயி வேதனிச்சு. தனிக்கு ஸ்வர்ண நிறம் உள்ளதுகொண்டாணு காக்கச் சேட்டன் கொத்தான் வந்ததென்னு ஸ்வர்ணமீனினு மனஸ்ஸிலாயி.அதோடெ ஸ்வர்ண மீனிண்டெ அஹங்காரமெல்லாம் பம்ப கடந்நு. நல்ல ஒரு குஞ்ஞு மீனாயி அவன் குளத்தில் கழிஞ்ஞுகூடிகுணபாடம்: நம்முடெ அஹங்காரம் நமுக்கு ஆபத்துண்டாக்கும். தமிழ்ஒரு குளத்தில் ஒரு தங்க மீன் இருந்தது. அது மிகவும் கர்வம் பிடித்த மீனாக இருந்தது. “ஐயய்யே… உங்களையெல்லாம் பார்க்க ஓர் அழகும் இல்லை. ஆனால், என்னைப் பாருங்கள்… எவ்வளவு அழகு எனக்கு!” இப்படி தங்க மீன், பிற மீன்களைக் கேலி செய்யும். அப்படி இருக்கையில், ஒரு காக்கை அண்ணன் அந்த வழியாக வந்தார். குளத்தில் ஏதோ தங்க நிறத்தில் வெட்டி மின்னுவது காக்கை அண்ணனின் கண்ணில் பட்டது. “ஐயோடா, அது தங்க மீன் ஆச்சே!” காக்கை அண்ணன் வாயில், ஒரு கப்பல் ஓட்டும் அளவுக்கு எச்சில் ஊறியது. காக்கை அண்ணன் உடனடியாக தங்க மீன் மேலொரு கொத்து விட்டது. அதிர்ஷ்டவசமாக தங்க மீனின் ஒரு துடுப்பில் மட்டுமே கொத்து விழுந்தது. எப்படி ஆனாலும், தங்க மீனுக்கு கடுமையான வலி. தனக்குத் தங்க நிறம் இருந்ததால்தான் காக்கை அண்ணன் கொத்த வந்தார் என்று தங்க மீனுக்குப் புரிந்தது. அத்தோடு, தங்க மீனின் கர்வம் போயிற்று. ஒரு நல்ல மீன் குஞ்சாக அந்தக் குளத்தில் வாழத் தொடங்கியது. ('பம்ப கடந்நு' என்பது மரபுத் தொடர். ஆற்றைக்கடந்து அந்தப் பக்கம் போய்விட்டது என்கிற பொருளில் வரும்.) நீதி: நம் கர்வம் நமக்கு ஆபத்தை விளைவிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !