ரியோ ஒலிம்பிக்: கோலாகல ஆரம்பம்
பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் நடைபெற்றது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். 28 வகையான விளையாட்டுகளில் 306 போட்டிகளில் பதக்கத்தை வெல்ல விளையாட்டு வீரர்கள் தயாராகி உள்ளனர். 40 நாடுகளின் தலைவர்கள் ஒலிம்பிக் தொடக்கவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். தென் அமெரிக்கா நாடுகளில் முதன் முதலாக பிரேஸில் நாடு ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. இந்தியா சார்பில் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்தி வந்தார். அணிவகுப்பில் ஒலிம்பிக் தாயகமான கிரீஸ், முதல் நாடாகச் சென்றது. இந்தப் பட்டியலில் இந்தியா 95ஆவது இடத்தில் உள்ளது.