தெரு நாய்களுக்கு அடைக்கலம்
துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு பேரங்காடி(மால்) தெரு நாய்களுக்காக தன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. சமீபத்தில் அந்நகரில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து நகரில் வெளியே தலைகாட்ட முடியாத அளவு குளிர் நிலவுகிறது. இந்நிலையில் தெரு நாய்களின் துயர் துடைக்க முன்வந்த பேரங்காடி, இரவில் நாய்கள் தங்கள் அங்காடியின் உள்ளே உறங்க அனுமதித்துள்ளது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட விலங்கு ஆர்வலர்கள் அந்த நாய்களுக்கு, போர்த்திக்கொள்ள கம்பளிப் போர்வைகளும், இரவு உணவும் அளிக்க முன்வந்தனர். இப்போது இஸ்தான்புல் நகர நாய்கள் குளிர், பசி ஆகிய தொந்தரவுகள் இன்றி நிம்மதியாக உறங்குகின்றன.