யாருக்கும் சிக்காத மாநிலம்
எத்தனை மாநிலங்களை உள்ளடக்கியது இந்தியா? உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை, இல்லையா? குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்கள் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. அப்படி ஒரு மாநிலம்தான் சிக்கிம். அங்கே பேசப்படும் லிம்பு மொழியில் சிக்கிம் என்றால் 'புதிய அரண்மனை' என்று பொருள். சீன, திபெத்திய மொழிகளின் கலவையே லிம்பு மொழி. திபெத்திய மொழியில் சிக்கிமிற்கு பெயர் 'டிரன்ஜாய்'. இதன் அர்த்தம் அரிசிப் பள்ளத்தாக்கு. அதிக தூரத்திலும் மிக உயரத்திலும் சிக்கிம் அமைந்திருக்கிறது! இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த மௌரிய மற்றும் மொகலாயர் ராஜ்ஜியத்திடம்கூட சிக்கிம் சிக்கவில்லை. அவ்வளவு பாதுகாப்பான நில அமைப்பு!ஆனாலும், திபெத், பூட்டான் போன்ற பக்கத்து நாடுகளின் ஆக்கிரமிப்பால் பல சோதனைகளை சந்தித்தது சிக்கிம். அதன்பிறகே, பிரிட்டிஷ் அரசாங்கம் சிக்கிமிற்கு ராணுவ உதவி அளித்தது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முயற்சியால் ஐ.நா. பிரதிநிதிகள் முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் 97.6 சதவீதம் பேர் இந்தியாவுடன் இணைய வாக்களித்தனர். இதனால், 1975ல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, இந்திய மாநிலமாக சிக்கிம் இணைந்தது.மேற்கில் நேபாளம், வடக்கு மற்றும் வடகிழக்கில் சீனா, திபெத், கிழக்கில் பூட்டான், தெற்கில் இந்தியாவின் மேற்கு வங்கம் அமைந்துள்ளது. சுற்றிச் சுற்றிச் சர்வதேச எல்லைகளைக் கொண்டிருப்பதால் அங்கே சுற்றுலா செல்ல கடும் விதிமுறைகள் உள்ளன. உலகின் அழகிய இடமாகவும் பனி மலைச் சிகரங்களுடனும் வண்ணத்துப் பூச்சிகளின் வசிப்பிடமாகவும் இயற்கையின் கை வண்ணத்தில் உண்மையிலேயே மிக உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறது சிக்கிம்!இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள் 29; 1. ஆந்திரப் பிரதேசம்2. அருணாச்சலப் பிரதேசம்3. அஸ்ஸாம்4. பீகார்5. சட்டீஸ்கர்6. கோவா7. குஜராத்8. ஹரியானா9. ஹிமாசலப் பிரதேசம்10. ஜம்மு காஷ்மீர்11. ஜார்க்கண்ட்12. கர்நாடகம்13. கேரளம்14. மத்தியப் பிரதேசம்15. மகாராஷ்டிரம்16. மணிப்பூர்17. மேகாலயா18. மிசோரம்19. நாகாலாந்து20. ஒரிஸ்ஸா21. பஞ்சாப்22. ராஜஸ்தான்23. சிக்கிம்24. தமிழ்நாடு25. தெலுங்கானா26. திரிபுரா27. உத்தரப் பிரதேசம்28. உத்தரகண்ட்யூனியன் பிரதேசங்கள் 7A. அந்தமான் நிக்கோபார் தீவுகள்B. சண்டிகர்C. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிD. டாமன் டையுE. டில்லிF. லட்சத்தீவுகள்G. புதுச்சேரிஉலகின் 3ஆவது உயர்ந்த சிகரமான கஞ்சன்ஜங்கா, 28 மலைச்சிகரங்கள், 227 ஏரிகள், வெப்ப நீரூற்றுகள், ஆறுகள் என இயற்கைக்குச் சொந்தமான மாநிலம் சிக்கிம்!பூட்டியாக்கள், லெப்சே, பிஹாரிகள், வங்காளிகள் மற்றும் மார்வாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் வசிக்கின்றன.இந்தியாவில் இயற்கை விவசாயத்தை முழுமையாக மேற்கொள்ளும் முதல் மாநிலம்.