உள்ளூர் செய்திகள்

மின்னணு கழிவில் கம்ப்யூட்டர் தயாரிக்கும் மாணவன்

மும்பை காட்கோபர் பகுதியில், மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்து வருபவரின் மகன் ஜெயந்த். ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், தனது தந்தை ரவீந்திராவுக்கு உதவியாக இருந்து வந்தார். தந்தை சேகரித்து வரும் மின்னணு கழிவுகளில் இருந்து, கம்ப்யூட்டர் தயாரிக்க தேவையான பாகங்களைத் தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர்கள் செய்து வருகிறார். அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் நிலையை கண்காணிக்கும் கம்ப்யூட்டர்கள் வரை உருவாக்கி வருகிறார். தற்போது, தனது தந்தையின் அறிவுரைப்படி 10ஆம் வகுப்பில் சேர்ந்து பள்ளிப்படிப்பைத் தொடர உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !