இனி பாடவே கூடாது நீதிபதி அதிரடித் தீர்ப்பு!
இங்கிலாந்து, நார்விச் பகுதியைச் சேர்ந்தவர் ஹெதர் வெப். வயது, 48. இவர், ஓய்வு நேரங்களில் பாடல் பாடுவது வழக்கம். உச்சஸ்தாயியில், கீச் குரலில் இவர் பாடத் தொடங்கினால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் தூக்கம் போய்விடும். மேலும், சிறு குழந்தைகளும் மிரண்டு அழத்தொடங்கிவிடும். பலமுறை ஹெதர் வெப் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் அந்தப் பெண்ணை பலமுறை எச்சரித்தனர். அப்படியும் விடாமல் பாடல்களைப் பாடி வந்துள்ளார் ஹெதர். இதையடுத்து, அவர் பாடியதை ரெக்கார்ட் செய்த அப்பகுதி மக்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அப்பாடலைக் கேட்ட நீதிபதி அதிர்ச்சியடைந்தார். இனிமேல் ஹெதர் எக்காலத்திலும் பாடக்கூடாது என்று அதிரடியாகத் தீர்ப்பு வழங்கினார். தண்ணீரில் மூழ்கும் பூனை கத்துவதைப்போல, ஹெதர் பாடுவதைச் சகிக்கவே முடியாது என்று அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.