உள்ளூர் செய்திகள்

சூழல் மாசுபாட்டை தடுக்க, கூடுதல் வரி

சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு, கூடுதல் ஜி.எஸ்.டி. வரிவிதிக்க, மத்திய அரசு பரீசலித்து வருகிறது. நாடு முழுவதும், ஒரே சீரான ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை விதிப்பதற்கான மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் உற்பத்தி பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி.யில் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க, இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்தி, மாசுபாட்டை குறைக்கும் திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !